தொடர்புடைய செய்திகள்
- 5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....
- திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!
- தவெகவுடன் கூட்டணி!.. விசிக மீது கோபம்!.. நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் திமுக?...
- திமுக ஆட்சியின் அவலங்களில் ஒன்று.. முதலைமச்சர் சம்பளம் : ரூ.2,05,000.. Factcheck head சம்பளம் : ரூ.3,00,000.. ட்விட்டரில் பரவும் தகவல் உண்மையா?
- 15 வருடங்களுக்கு பின் வீட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி!.. பின்னணி என்ன?..
ராஜினாமா பண்ணிட்டு வாங்க!.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை விரிக்கும் தவெக!..
நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஆட்சி அமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது. அதையேற்று அந்த கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. மேலும், கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகள் தவெகவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுவிட்டன.
ஒருபக்கம் அதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர்..
இதையடுத்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக, திமுக போன்ற கட்சிகள் குற்றம் சாட்டியது.
ஆனால், தவெகவில் சேர்வது என்பது அவர்களின் விருப்பம்.. அவர்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டுதான் எங்களுடன் வந்து சேர்ந்திருக்கிறார்கள். நாங்கள் எந்த குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை என தவெக சொல்கிறது. தமிழக அரசியல் தற்போது திமுக Vs தவெக என மாறிவிட்டது. அனேகமாக எதிர்காலத்திலும் இதுதான் தொடரும். ஏனெனில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது. இனி அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையை அதிமுக நிர்வாகிகளும் எம்.எல்.ஏக்களுமே இழந்து விட்டார்கள். அதனால்தான், அந்த கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருகிறார்கள்..
எங்களுடன் இணைய விரும்பினால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள்.. உங்கள் தொகுதியில் நீங்கள் என்ன செலவு செய்தீர்களோ அதை திருப்பி கொடுத்துவிடுகிறோம், அதோடு அதே தொகுதியில் இடைத்தேர்தலில் நீங்களே வேட்பாளராக நில்லுங்கள்.. நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.. தேர்தல் செலவையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தவெக தரப்பில் சொல்லப்படுவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
இது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் பிடித்திருக்கிறது. ஏனெனில் ஆளும் கட்சியில் எம்.எல்.ஏவாக இருக்கவே அவர்கள் ஆசைப்படுவார்கள். அதோடு அதிமுகவின் எதிர்காலத்தின் மீது அவர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது. அதனால்தான் தவெகவோடு பயணிப்பதே அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என அவர்கள் நம்புகிறார்கள் என சொல்லப்படுகிறது.