1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind why vijay met cv shanmugam today

நேத்து போனது நாகரீக அரசியல்!.. இன்னைக்கு போனது அரசியல் லாபம்!.. விஜய் போடும் கணக்கு!...

vijay
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது ஒரு நாகரிக அரசியலாக பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த 50 வருடங்களில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.

1967-ல் முதல்முறை அண்ணா முதலமைச்சரானபோது எதிர் கட்சி தலைவரான காமராஜர் உள்ளிட்ட சிலரை சந்தித்தார்.. திமுகவை கடுமையாக எதிர்த்த பெரியரையும் சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின் விஜய் மட்டுமே இப்படி செய்திருக்கிறார். இதை பலரும் பாராட்டி வந்தனர்..

ஆனால் திடீரென இன்று சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோரை நேரில் போய் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அதிமுக தற்போது இரண்டாக பிளவு பட்டிருக்கும் சூழலில் விஜய் அவர்களை சந்தித்தது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

நாளை சட்டமன்றத்தில் தவெக தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்றுதான் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது தவெக. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விலகலாம். அந்த சூழ்நிலையில் ஆட்சி நீடிக்க வேண்டுமெனில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும்.

சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியுடன் 30 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.  அதோடு அவர்கள் தவெகவை ஆதரிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். நாளை அவர்கள் தவெகவுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். எனவே விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகினாலும் அதிமுக எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடர முடியும் என விஜய் நம்புகிறார். அதனால்தான் இன்று சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை சந்தித்திருக்கிறார்.

நேற்று முக ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை விஜய் சந்தித்தபோது அது நாகரிக அரசியலாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆகியோரை சந்தித்திருப்பது அரசியல் லாபத்திற்காக என பார்க்கப்படுகிறது. எனவே இது அரசியல்ரீதியாக விஜயின் இமேஜை கொஞ்சம் குறைத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு!. யாரெல்லாம் விஜய்க்கு ஆதரவு?..