1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. the tasmac shops closed by tn opened now

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

tasmac
தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றவுடன் தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்தார். இதை பொதுமக்கள் பலரும் வரவேற்றார்கள். வழிபாட்டுத்தளங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக்குகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 717 டாஸ்மாக்குகள் மூடப்பட்டன..

இதற்கு அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து தவெக அரசை பாராட்டி பேசினார்கள். இந்நிலையில்தான், அப்படி மூடப்பட்ட சில கடைகள் தற்போது திறக்கப்பட்டு வருவது பொது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில் மூன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் அது தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகிலேயே அந்த மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த பாரின் உரிமையாளரான செல்வம் சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த நிலையில்தான் அந்த கடைகள் தற்போது திறக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.  இதுபற்றி டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டபோது கடையை மூடுவதற்கான உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை. அதானல்தான் கடைகளை திறந்திருக்கிறோம் என கூறியிருக்கிறார்கள்..

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையி மூடப்பட்ட மதுக்கடையும் தற்போது திறக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் வசிக்கும்  பொதுமக்களுக்கு ஆத்திரத்தை கொடுத்திருக்கிறது. அந்த கடையை மூட வேண்டும் என பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்..
About Writer
பாலகிருஷ்ணன்