தொடர்புடைய செய்திகள்
- இளையராஜாவை மனசுல நினைச்சி எழுதின கதை மஞ்சணத்தி!. மாரி செல்வராஜ் பேட்டி..
- எனக்கு வேலை இருக்கு.. உள்ள போய்டுவேன்!.. ரசிகர்களிடம் கோபப்பட்ட இளையராஜா!..
- இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!.. வைரல் போட்டோ!..
- அவர்தான் முதலமைச்சர்னு யாராவது அவர்கிட்ட சொல்லுங்கப்பா!.. மாறுவாரா விஜய்?..
- ஆதரவு மட்டும் வேணும்!. ஆனா தீர்ந்து போன கட்சியா?!.. விஜய் பேசியது சரியா?...
சட்டசபையில் சைலண்ட்!.. திருச்சியில் துள்ளுகிறார்!.. விஜயை தாக்கிய ஆ.ராசா!...
தமிழக முதல்வர் விஜய் நேற்று திருச்சிக்கு சென்றார். திருச்சி கிழக்கு தொகுதியில் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வருவதற்காக தவெக சார்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கம் போல் அந்த கூட்டத்திலும் பிரச்சார வேனின் மீது நின்று வழக்கமான அதே ஸ்டைலில் திமுகவை கடுமையாக விமர்சித்தும் நக்கலடித்தும் பேசினார் முதல்வர் விஜய்.
விஜய் தமிழக முதல்வரான பின் மக்களை சந்திக்கும் முதல் கூட்டம் என்பதால் தமிழக அரசின் திட்டங்களை பற்றியும், கடந்த 20 நாட்களாக தவெக ஆட்சியில் என்ன நடந்தது என்பதை பற்றியும், எதிர்கால திட்டங்களை பற்றியும் விஜய் பேசுவார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பிரச்சாரத்தில் பேசுவது போல திமுகவை திட்டி பேசினார் விஜய்.
விஜயின் இந்த பேச்சை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா சட்டமன்றத்தில் தளர்வு, தயக்கம், சோர்வு, இயலாமை என இருந்த முதலமைச்சர் விஜய் திருச்சியில் எள்ளலும் துள்ளலுமாக பேசுகிறார். இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள்.. கர்ஜிப்பதாக நினைத்து கத்தி பேசியுள்ளார்.. எழுதிக் கொடுத்தது யார்?
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி மற்றதெல்லாம் அல்லு சில்லு என்கிறார் விஜய். முதலமைச்சரே!.. உங்களுக்கு சங்கடமாக இல்லையா?.. அல்லு சில்லுகளின் வீட்டிற்கு நீங்களே சென்று சால்வை போட்டு ஓட்டை வாங்குனீர்களே!. அந்த அல்லு சில்லுகளிடம் கெஞ்சி கூத்தாடியது தில்லு முல்லா?.. அரசியல் அநாகரீகமா? என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், தவெக தூயசக்தி அல்ல.. துப்பில்லாத சக்தி.. பிரதமருக்கு முன்னாள் உங்களின் சக்தி எங்கே போனது?.. மேகதாது பிரச்சனையில் டி.கே.சிவக்குமாருக்கு உங்கள் பதில் என்ன? என ராசா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
