1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. director mari selvaraj talk about ilayaraja

இளையராஜாவை மனசுல நினைச்சி எழுதின கதை மஞ்சணத்தி!. மாரி செல்வராஜ் பேட்டி..

manjanathi
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின் கர்ணன், வாழை மாமன்னன், பைசன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பாரதிராஜாவாக மாரி செல்வராஜ் வந்திருக்கிறார் என திரை விமர்சகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
 
தற்போது மஞ்சணத்தி என்கிற புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படம் தொடர்பான கிளிம்ப்ச் வீடியோ மற்றும் அறிவிப்புகள் வெளியானது. இளையராஜாவே தனது கைப்பட மஞ்சணத்தி என எழுதியதையே தலைப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
 
இந்நிலையில், இன்று தனது 83வது பிறந்த நாளை கொண்டாடும் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு வெளியே வந்த மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘சினிமாவுக்கு முன்பே இளையராஜா எனக்கு நெருக்கமாக இருந்தார். அவரின் பாடல்கள்தான் எல்லாமே.. சினிமாவுக்கு வந்தபின் அவரின் இசையில் ஒரு படத்தை இயக்குவதுதான் எனது ஏக்கமாக இருந்தது.. ஆனால் ஒரு சரியான கதைக்காக காத்திருந்தேன். மஞ்சணத்தி மூலம் அது நடந்திருக்கிறது.
 
என் மீது அவர் காட்டும் அன்பும், மரியாதையும் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.. நான் இதுவரை ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். பல திரைக்கதைகளை எழுதியிருக்கிறேன்.. ஆனால், இசையமைப்பாளரை மனதில் நினைத்து எந்த கதையையும் எழுதியதில்லை. ஆனால், முதல்முறையாக இளையராஜாவின் இசையை மனதில் நினைத்து நான் எழுதிய கதை மஞ்சணத்தி மட்டுமே. கண்டிப்பாக நான் இளையராஜா மீது வைத்திருக்கும் அன்பையும், மரியாதையும் மஞ்சணத்தி பிரதிபலிக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
சிவகார்த்திகேயன் படத்தால் 120 கோடி கடன்!.. 50 கோடி இழப்பு!.. புலம்பும் தயாரிப்பாளர்!..