1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk is angry with cm vijay for his talk trichy

ஆதரவு மட்டும் வேணும்!. ஆனா தீர்ந்து போன கட்சியா?!.. விஜய் பேசியது சரியா?...

vijay
தமிழக முதலமைச்சர் விஜய் தவெகவை துவங்கிய போதிலிருந்தே அதிமுகவைப் பற்றி பெரிதாக விமர்சித்து பேசியதில்லை. அவ்வளவு ஏன்? அதிமுக என்கிற வார்த்தையை கூட அவர் பிரச்சாரங்களில் பயன்படுத்தவில்லை. மோடியிடம் அடிமையாக கிடக்கிறார்களே அவர்கள்.. மற்றும் பலர்.. என்றுதான் தொடர்ந்து சொல்லி வந்தார்.  குறிப்பாக தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டியே என தொடர்ந்து சொல்லி அதிமுக ஏதோ சீனில் இல்லாதது போல ஒரு இமேஜை உருவாக்கினார்.  அது அவருக்கு தேர்தலில் நல்ல பலனையும் கொடுத்தது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டது..
 
விஜயை அதிமுகவும்ம் திமுகவும் தவறாக கணித்ததால் ஏற்பட்ட விளைவு இது. அதைத்தான் தற்போது அதிமுக சந்தித்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிச்சாமியின் மீது அதிருப்தியடைந்த சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக தெரிவித்தார்கள். மேலும் முதல்வர் விஜய் தமிழக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்த போது அதை ஆதரித்தும் வாக்களித்தார்கள். இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய் சிவி சண்முகத்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்..
 
அதோடு அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தனது கட்சியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டார்கள். அதோடு, மேலும் பல அதிமுக நிர்வாகிகளும், அதிமுக எம்.எல்.ஏக்களும் தவெக பக்கம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில்தான், இன்று திருச்சியில் பேசிய முதல்வர் விஜய் வழக்கம் போல் அதிமுகவை மிகவும் மட்டம் தட்டி பேசினார். ‘தேர்தலுக்கு முன்னாடியும் அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை.. இப்ப தேர்தலுக்கு பிறகு சுத்தம்.. மற்றும் பலர்.. நீங்கள் (திமுக) எப்போது தீர்ந்து போன சக்தியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என நினைத்தீர்களோ அப்போது தூர்ந்து போன சக்தியாகவும் மாறி விட்டீர்கள்’ என்று பேசியிருந்தார்
 
இது அதிமுகவை கோபப்படுத்தியுள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நம்பிக்கை தீர்மானத்திற்கு வாக்களிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் வேண்டும்.. அதிமுகவுடன் தவெக குதிரை பேரத்திலும் ஈடுபடும்.. அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைவார்கள். ஆனால் அந்த கட்சியை ஒன்றும் இல்லாதது போல முதல்வர் விஜய் பேசுகிறார்.. ஆதரவு கொடுக்க மட்டும் அதிமுக வேண்டும்.. ஆனால் அது தீர்ந்து போன சத்தியா?.. அது தீர்ந்து போன சக்தி என்றால் எதற்காக விஜய் சி.வி.சண்முகத்தை நேரில் போய் சந்தித்து பேசினார்?’ என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
உலகமே உங்கள சுத்திதான் இயக்குற மாதிரி நினைப்பா?!. விஜய்க்கு பழனிச்சாமி பதிலடி...