1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. CBSE's Rs 384 Crore OSM Deal: How Coempt Beat TCS by 2 Marks and a 60% Lower Bid

CBSE விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் வாய்ப்பை இழந்தது டிசிஎஸ்.. 566 கோடி ரூபாய் வித்தியாசம்..

சிபிஎஸ்இ டிஜிட்டல் மதிப்பீடு
CBSE விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் 384 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, முன்னணி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தை விட வெறும் 2 மதிப்பெண்கள் வித்தியாசத்திலும், 60% குறைவான விலைப் புள்ளியிலும் Coempt Edu Teck நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது சிபிஎஸ்இ-யின் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் காலதாமதங்கள் காரணமாக இந்த ஒப்பந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
 
தொழில்நுட்ப மதிப்பீட்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோயம்ட் நிறுவனம் 100-க்கு 91 மதிப்பெண்களும், டிசிஎஸ் நிறுவனம் 89 மதிப்பெண்களும் பெற்றன. விடைத்தாள்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் விநியோகித்த முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் கோயம்ட் நிறுவனத்திற்கு டிசிஎஸ்-ஐ விட அதிக மதிப்பெண்கள் கிடைத்தன. அதே நேரத்தில், நிதி வலிமையில் டிசிஎஸ் முன்னிலையில் இருந்தது.
 
நிதிப்புள்ளிகள் அடிப்படையில், கோயம்ட் நிறுவனம் ஒரு விடைத்தாளுக்கு சுமார் 25 ரூபாய் வரை மட்டுமே கேட்டிருந்த நிலையில், டிசிஎஸ் நிறுவனம் 53 முதல் 65 ரூபாய் வரை கோரியிருந்தது. ஒட்டுமொத்தமாக கோயம்ட்டின் மொத்த மதிப்பு 384.6 கோடி ரூபாயாகவும், டிசிஎஸ்-இன் மதிப்பு 951.3 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டது. 
 
இந்த 566 கோடி ரூபாய் விலை வித்தியாசமும், தொழில்நுட்ப புள்ளிகளுமே கோயம்ட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை வெல்ல காரணமாக அமைந்தது. டெண்டர் விதிமுறைகளின் படியே இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
சட்டசபையில் சைலண்ட்!.. திருச்சியில் துள்ளுகிறார்!.. விஜயை தாக்கிய ஆ.ராசா!...