தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலின், ரஜினி, கமல்!. ஒன்னா போய் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!.. வைரல் போட்டோ!..
- 10 கோடி பட்ஜெட்!. 1400 கோடி வசூல்!.. ரசிகர்களை கவர்ந்த OBSESSION பேய் படம்...
- இளையராஜா பக்கம் போகும் இளம் இயக்குனர்கள்!.. கம்பேக் இசைஞானி!...
- எந்த ஹீரோவும் சிக்கலயே!.. யார வச்சி படமெடுக்க?!.. நொந்துபோன வெங்கட்பிரபு!...
- மாரி செல்வராஜ் - இளையராஜா இணையும் மஞ்சணத்தி- வெளியானது பர்ட்ஸ் லுக் போஸ்டர்
எனக்கு வேலை இருக்கு.. உள்ள போய்டுவேன்!.. ரசிகர்களிடம் கோபப்பட்ட இளையராஜா!..
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக 40 வருடங்களுக்கு மேல் கோலோச்சியவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து விட்டார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும் இளையராஜாவின் ரசிகர்களாக இருக்கிறார்கள். இன்னும் பலரும் கார்களில் நெடும் பயணம் செல்லும்போது அவர்களுக்கு துணையாக இளையராஜாவின் பாடல்கள்தான் கூடவே சொல்கிறது. ஒரு மருத்துவர் போல மனக்காயங்களுக்கு மருந்து போடுகிறார் இளையராஜா. ஒரு தந்தை ஸ்தானத்தில் பலர் மனக்குறைகளுக்கு அவர் ஆறுதல் சொல்கிறார்..
ஒவ்வொரு வருடம் ஜூன் 2ம் தேதி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அந்த வகையில் இன்று அவர் தனது 83 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவரின் சென்னையில் அவரின் ஸ்டுடியோவிற்கு அவரை நேரில் பார்த்து வாழ்த்து சொல்வதற்காக ரசிகர்கள் பலரும் இன்று காலை வந்தார்கள். அவர்களுக்காக இளையராஜா வெளியே வந்தார்.
அப்போது அவரை அருகில் பார்ப்பதற்காகவும் போட்டோ எடுத்துக் கொள்வதற்கும் பலரும் முண்டியடித்தனர். இதைப்பார்த்து கோபப்பட்ட இளையராஜா எனக்கு இன்று பெங்களூரில் சிம்பனி தொடர்பான கச்சேரி இருக்கிறது.. ஆனாலும் அதை விட்டுவிட்டு நான் உங்களுக்காகதான் வந்து நின்று கொண்டிருக்கிறேன்.. அமைதியாக இருங்கள்.. வரிசையாக வாருங்கள். ஒவ்வொருவரிடமும் நான் பேசுகிறேன்.. இப்படி கூட்டமாக நின்று கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.. எனக்கு வேலை இருக்கிறது நான் உள்ளே சென்று விடுவேன் என கூறினார். அதன்பின் ரசிகர்கள் வரிசையாக சென்று அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும் இளையராஜாவின் ரசிகர்களாக இருக்கிறார்கள். இன்னும் பலரும் கார்களில் நெடும் பயணம் செல்லும்போது அவர்களுக்கு துணையாக இளையராஜாவின் பாடல்கள்தான் கூடவே சொல்கிறது. ஒரு மருத்துவர் போல மனக்காயங்களுக்கு மருந்து போடுகிறார் இளையராஜா. ஒரு தந்தை ஸ்தானத்தில் பலர் மனக்குறைகளுக்கு அவர் ஆறுதல் சொல்கிறார்..
ஒவ்வொரு வருடம் ஜூன் 2ம் தேதி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அந்த வகையில் இன்று அவர் தனது 83 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவரின் சென்னையில் அவரின் ஸ்டுடியோவிற்கு அவரை நேரில் பார்த்து வாழ்த்து சொல்வதற்காக ரசிகர்கள் பலரும் இன்று காலை வந்தார்கள். அவர்களுக்காக இளையராஜா வெளியே வந்தார்.
அடுத்த கட்டுரையில்