1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. mk stalin rajini kamal wishing ilayaraja birthday

இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!.. வைரல் போட்டோ!..

stalin raja kamal
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கியவர் இளையராஜா. தமிழ் சினிமா ரசிகர்கள் ஹிந்தி பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தபோது அவர்களை தமிழ் பாடலை கேட்க வைத்தவர் இளையராஜா. அவரின் கிராமத்திய இசை சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஒலித்தது.

30 வருடங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சினார் இளையராஜா. அவரை நம்பி 90 சதவீத திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. திரைப்படங்களுக்கு தமது பாடல்கள் மூலம் வெற்றியைத் தேடிக் கொடுத்தார் என்றால் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கும் உயிரூட்டினார் இளையராஜா.

அவருக்கு பின் ஏ.ஆர்.ரகுமான், தேவா, யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற பல இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போதும் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இப்போதும் இளையராஜாவின் இசைக்கச்சேரிகளுக்கு கூட்டம் கூடுகிறது.

ilayaraja

ஜூன் 2ம் தேதியான இன்று இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய மூவரும் ஒன்றாக இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்கள்.

எக்ஸ் தளத்தில்  ‘இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்