1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Will DMK, CJP and AAP Join Hands to Form a Third Front in 2029?

காங்கிரஸ், பாஜக இல்லாத புதிய அணி.. திமுக - ஆம் ஆத்மி - சிஜேபி 3வது அணியா?

திமுக
‘இந்தியா’ கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ள நிலையில், தேசிய அரசியலில் மூன்றாவது கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுகவுடன் ஆம் ஆத்மி, சிஜேபி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய அரசியல் அணியை உருவாக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. குறிப்பாக காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திமுக தனி பாதையை தேர்வு செய்திருப்பது இந்த விவாதத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
 
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை சிறந்த முதல்வர்கள் என குறிப்பிட்டது தேசிய அரசியலில் கவனத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அரசியல் சக்தியை உருவாக்கும் முயற்சிக்கான தொடக்கமாக இது இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
2029 மக்களவைத் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தலாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு எதிராக வலுவான மாற்று அணியை உருவாக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் தேசிய அளவில் இளைஞர்களை ஈர்க்கும் சிஜேபி போன்ற புதிய அரசியல் அமைப்புகளுடன் இணைவது திமுகவுக்கு புதிய வாய்ப்பை உருவாக்கலாம்.
 
ஒருபுறம் பாஜக, மறுபுறம் காங்கிரஸ் என இரு துருவ அரசியல் நிலவும் நிலையில், மூன்றாவது அணி உண்மையாக உருவானால் தேசிய தேர்தல் கணக்கே மாறக்கூடும். குறிப்பாக இளைஞர் வாக்குகளை அது எந்த அளவுக்கு ஈர்க்கிறது என்பதுதான் 2029 தேர்தலில் அதன் பலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த ஆப்பிள் நிறுவனம்.. எல்லாம் ஏஐ தான் காரணம்..