1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister adhav arjuna said he worked for dmk

திமுக பத்தி எல்லாத்தையும் சொன்னா தாங்கமாட்டீங்க!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!..

adhav arjuna
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் சட்டசபையில் தவெக அமைச்சர்களுக்கும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட முன்னாள் திமுக அமைச்சர்களிடையே காரசாரமான விவாதங்களும், வாக்குவாதங்களும் நடைபெற்று வருகிறது.

திமுகவுக்கு எதிராக சிடி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா போன்ற அமைச்சர்கள் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பேசி வருகிறார்கள். இதற்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான் இன்று சட்டசபையில் பேசிய ஆதாவ் அர்ஜுனா ‘2015 முதல் 2021 வரை நான் திமுகவுக்கு பணியாற்றியது எல்லோருக்கும் தெரியும். உங்கள் தலைவருக்கும் என்னுடைய பணி என்ன என்பது தெரியும்.. உண்மையாக பணியாற்றியவன் நான்.. திமுக பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு அது நல்லதல்ல..  என் பணியை முடித்துவிட்டு அடுத்த பணிக்கு வந்து விட்டேன்’ எனக் கூறினார்.

இதற்கு சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் ‘வாளோடு எதிர்வரும் எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வால் கொண்டு எதிர்க்கக் கூடாது’ என அறிவுரை கூறினார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..