1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. southern railway decides to do change in rac system

ரயிலில் RAC டிக்கெட் நடைமுறையில் மாற்றம்!.. அதிகாரிகள் ஆலோசனை...

rac train
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் கிடைக்காதபோது RAC  நடைமுறையில்தான் டிக்கெட்டுகளை புக் செய்கிறார்கள். ஏனெனில் எல்லா நேரமும் டிக்கெட் கிடைப்பதில்லை. RAC முறையில் டிக்கெட் பதிவு செய்தால் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது நமக்கு டிக்கெட் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பலரும் RAC முறையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் RAC டிக்கெட் நடைமுறையில் மாற்றங்களை கொண்டுவர தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ரயில்களில் பாதி படுக்கைக்கு முழு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் RAC டிக்கெட்டில் ஒரே படுக்கையை ஆண் மற்றும் பெண் பயணிக்கு ஒதுக்கும்போது பாதுகாப்பு தொடர்பாக அசவுகரியம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து RAC டிக்கெட் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மதுரை நகை கடை கொள்ளையில் புதிய டிவிட்ஸ்ட்!.. போலீசார் விசாரணை....