1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. djp warning inspectors will be suspened if no action

போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! - டிஜிபி கடும் எச்சரிக்கை...

dgp
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின் போதைப்பொருளை தடுக்க தனிப்பிரிவே உண்டாக்கப்பட்டது. ஆனால், அதனாலும் எந்த பலனும் இல்லை.

ஒருபக்கம், மது மற்றும் கஞ்சா போதையில் பல கொலைகளும் நடந்துகொண்டே இருக்கிறது. கடந்த தீபாவளியன்று மட்டும் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தது. அதில், பெரும்பாலானவை போதையில் முன்விரோதம் காரணமாகவே நடந்துள்ளது. இதையடுத்து, சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருளால் மரணம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என டிஜிபி எச்சரித்துள்ளார். மேலும், மத்திய முகமைகள் போதை பொருளை பறிமுதல் செய்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனவும், போதைப்பொருள் தடுப்பில் மெத்தனப்போக்கு இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி எச்சரித்துள்ளார்.   
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரத்தீஷுக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்!.. பிடிபடுவாரா?...