1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai in first place in bad wind in the world

மோசமான காற்று!.. உலகிலேயே சென்னை முதலிடம்...

chennai
சமீபகாலமாகவே சென்னையில் வீசும் காற்று மாசடைந்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் கூட மாசுபடிந்துள்ள காற்று வீசும் சென்னையில் நான் விளையாட மாட்டேன் என வெளிநாட்டை சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், உலகிலேயே மோசமான காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருக்கிறது. தீபாவளியன்று அதிக பட்டாசுகளை வெடித்ததால் சென்னையின் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி சென்னையில் சர்வதேச காற்றின் தரக்குறியீட்டுப் பட்டியலில் 907 புள்ளிகளாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நான் மெசேஜ் அனுப்பல!.. இது அரசியல் சதி!.. தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுப்பு...