1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PhonePe 123Pay: Digital Payments Without Internet Coming Soon

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இனி இண்டர்நெட் தேவையில்லை.. போன்பே புதிய முயற்சி...

போன்பே
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் போன்பே நிறுவனம் புதிய முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளது. 
 
இணைய வசதி இல்லாமலேயே பணம் அனுப்பவும், பெறவும் உதவும் வகையில் PhonePe 123Pay சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இன்டர்நெட் வசதி குறைவாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எளிதாகும்.
 
குறிப்பாக 2G இணைப்பு மட்டுமே கிடைக்கும் பகுதிகளையும் கருத்தில் கொண்டு, குறுஞ்செய்தி மற்றும் பிரத்யேக தொழில்நுட்ப கட்டமைப்பை அடிப்படையாக வைத்து இந்த சேவை செயல்பட உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் அல்லது அதிவேக இணைய வசதி இல்லாதவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்த முடியும்.
 
இந்த சேவையை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க நோக்கியா, எச்எம்டி, லாவா உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களுடன் போன்பே இணைந்து செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் முறையாக சேவையை செயல்படுத்தும்போது பயனர்களுக்கு குரல் வழியாக வழிகாட்டும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
 
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உதவி எண்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 12 மொழிகளில் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து படிப்படியாக விளக்கம் வழங்கப்பட உள்ளது. இணையம் இல்லாத சூழலிலும் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி நடைமுறைக்கு வந்தால், டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாட்டில் இது முக்கியமான மாற்றமாக அமையலாம்.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய்யின் 100 நாள் ஆட்சிக்கு மைனஸ் 80 மதிப்பெண்கள்: நயினார் நாகேந்திரன்