1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2026 (13:39 IST)

இனி ஓடிபி மட்டும் இருந்தால் பணம் அனுப்ப முடியாது.. பான் கார்டு வாங்க பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. இன்று முதல் என்னென்ன மாற்றங்கள்?

இனி ஓடிபி மட்டும் இருந்தால் பணம் அனுப்ப முடியாது.. பான் கார்டு வாங்க பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. இன்று முதல் என்னென்ன மாற்றங்கள்?
இந்தியாவில் இன்று முதல் அதாவது ஏப்ரல் 1, முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் வங்கி விதிகளில் அதிரடி மாற்றங்களை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இனி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி மட்டும் போதாது; அதனுடன் பின் , பயோமெட்ரிக் அல்லது கடவுச்சொல் போன்ற கூடுதல் பாதுகாப்பு அடுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
யுபிஐ செயலிகளில் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் பார்க்க முடியும் மற்றும் 25 வங்கி கணக்குகள் வரை மட்டுமே இணைக்க முடியும். HDFC போன்ற வங்கிகள் யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதையும் மாதந்திர இலவச வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளன. ரயில் பயணிகளுக்கான டிக்கெட் ரத்து விதிகளும் மாற்றப்பட்டுள்ளன; ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் ரீஃபண்ட் கிடைக்காது.
 
மேலும், புதிய பான் கார்டு விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் போன்ற கூடுதல் ஆவணங்கள் கட்டாயம். FASTag வருடாந்திர கட்டணம் ரூ.3,075 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டிஜிட்டல் மோசடிகளை குறைக்கவும், வங்கிப் பாதுகாப்பை பலப்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
Edited by Siva