1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Lok Sabha Passes Bill Enabling Framework to Levy Charges on UPI Transactions

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்ட மசோதா.. மக்களவையில் நிறைவேற்றம்...

UPI charges
யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் முக்கிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
Payment and Settlement Systems Act, 2007-ன் பிரிவு 10A-வில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 'வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் மசோதா, 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற்றது.
 
இந்த் திருத்தம் உடனடியாக கட்டணங்களை அமல்படுத்தாது என்றாலும், இதுவரை வணிகர்களிடமிருந்து வணிகர் தள்ளுபடி வீதம் வசூலிப்பதை தடுத்து வந்த சட்டரீதியான தடையை நீக்குகிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் குறிப்பிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெறுகிறது.
 
இந்தியாவில் டிஜிட்டல் கட்டண கட்டமைப்பை பராமரிக்கவும், அதில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்ளவும் வங்கிகளுக்கும் சேவை நிறுவனங்களுக்கும் நிலையான வருவாய் மாடல் அவசியம் என அரசு கருதுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, டிஜிட்டல் உட்கட்டமைப்பை பலப்படுத்த ஆகும் செலவை 'பயன்படுத்துபவரே செலுத்தும்' கொள்கை மூலமாகவோ அல்லது வரி செலுத்துவோர் பணம் மூலமாகவோதான் ஈடுகட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
 
இருப்பினும், இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தாலும் சாதாரண நபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இருக்காது என்றும், பெரிய வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே MDR கட்டணம் பொருந்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
6 மாசத்துல 12 வெளிநாடு டூர் போன பிரதமர் மோடி!.. 75 கோடி செலவு!.. மத்திய அரசு தகவல்!...