அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?
சென்னையை அடுத்த அம்பத்தூரில் சிங்கப்பூரை சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தை முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவின் போது, இருவரும் இணைந்து அன்னாசி பழங்களை தரையில் உருட்டிவிட்ட நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்தது.
சிங்கப்பூர் நாட்டின் பாரம்பரியம் மற்றும் ஃபெங் சுய் முறைப்படி, புதிதாக வணிக நிறுவனங்கள் அல்லது வீடுகளை திறக்கும்போது அன்னாசி பழங்களை உருட்டிவிடுவது வழக்கமாகும். 'ஆங் லாய்' என்று அழைக்கப்படும் அன்னாசிப் பழத்தை இவ்வாறு உருட்டுவதன் மூலம் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு பெருகும் என்பது அந்நாட்டின் நம்பிக்கையாகும்.
கடந்த 2024-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நவீன தரவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

