25,000 ரூபாய் வரை இழப்பீடு தருகிறது இந்திய ரிசர்வ் வங்கி.. யார் யாருக்கு கிடைக்கும்?
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் மோசடியால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
சிறு மதிப்பிலான ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த வரைவு வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. குறிப்பாக மூத்த குடிமக்களின் பணப்பரிவர்த்தனைகளை பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் மற்றும் தாமதமான வரவு போன்ற முறைகள் ஆலோசிக்கப்படுகின்றன.
நிதி தயாரிப்புகளை தவறாக விற்பனை செய்வது மற்றும் கடன் வசூலிக்கும் முகவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தவும் விரிவான புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளன.
மேலும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்த 'மிஷன் சக்ஷம்' என்ற திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 1.40 லட்சம் வங்கிப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வங்கி சேவைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்த அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இது டிஜிட்டல் இந்தியா நோக்கிய பயணத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva