1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. neet exam for mbbs is is cancelled

மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து!.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...

neet exam
நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 23 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். நீட் தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கேள்வித்தாள்கள் லீக் ஆனதாக செய்திகள் வெளியானது. குறிப்பாக ராஜஸ்தானில் ஒரு பயிற்சி மையத்தில் அங்கு படிப்பவர்களுக்கு கேள்வித்தாள்கள் லீக் செய்யப்பட்டதாக போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர்.

நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில் சுமார் 120 கேள்விகள் ஒரு மாதத்திற்கு முன்பே வாட்ஸ் அப்பில் பரவியதாகவும் சொல்லப்பட்டது. வினாத்தாள் பல லட்சத்திற்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில போலீசாரின் சிறப்பு நடவடிகைகுழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில்தான், கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு மையம் அறிவித்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
சார் விஜய் முதல்வர் ஆயிட்டார்!.. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!.. வீடியோ!...