டெல்லி செல்லும் விஜய்!.. மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலரையும் சந்திக்க திட்டம்!...
நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிய விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். தவெகவுக்கு 108 தொகுதிகளில் கிடைத்த நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,விசிக மற்றும் முஸ்லீக் கட்சிகளின் துணையோடு தவெக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது..
நேற்று விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிலையில் இன்று சட்ட சட்டப்பேரவையில் பெரம்பூர் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரோடு தவெக எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக, திமுக எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டார்கள்.
இந்நிலையில், தமிழக மற்றும் தேசிய அரசியல் தலைவர்களை தொடர்ந்து சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார் தமிழக முதலமைச்சர் விஜய். இன்று மாலை 3 மணியளவில் அளவில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை அவரின் இல்லத்தில் விஜய் சந்திக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில், விரைவில் டெல்லி செல்லும் விஜய் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.