1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor rajinikanth reaction about vijay become cm

சார் விஜய் முதல்வர் ஆயிட்டார்!.. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!.. வீடியோ!...

rajini vijay
ரஜினியை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய். விஜயின் படங்களில் இடம் பெறும் பாடல்களில் ரஜினி போஸ்டரையெல்லாம் காட்டுவார்கள். நண்பர்கள் வட்டாரத்திலும் ரஜினியை ‘தலைவர்’ என்றுதான் விஜய் அழைப்பதுண்டு. ஆனால் சினிமாவில் ஒரு கட்டத்தில் ரஜினியை விஜய் தாண்டினார் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியை விட விஜயின் படங்கள் அதிக வசூலை பெற்றது. ரஜினியை விட விஜய் அதிக சம்பளம் வாங்கினார்..

இது ரஜினிகாந்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஜெயிலர் பட விழாவில் காக்கா - கழுகு சொன்னார் என விஜய் ரசிகர்கள் சொல்கிறார்கள். அந்த சம்பத்திற்கு பின் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து துவங்கினார்கள். ரஜினி படம் வெளியானாலே அந்த படத்திற்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரப்ப தொடங்கினார்கள்.

தற்போது அதை விஜய் தமிழகத்தின் முதல்வராக மாறியிருக்கிறார். நேற்று முக ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான் வைகோ உள்ளிட்ட பலரையும் விஜய் சந்தித்தார். ஆனால் அவர் ரஜினியை சென்று சந்திக்கவில்லை..

இந்நிலையில்தான், இன்று கர்நாடகா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ரஜினி வந்தபோது அங்கிருந்து ஒருவர் ‘சார் விஜய் முதல்வர் ஆயிட்டார்’ என்று ஏதோ அவரிடம் கேட்க வந்த போது ரஜினி சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லாமல் கையெடுத்து கும்பிவிட்டு சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


அடுத்த கட்டுரையில்
குடிதண்ணீர், சாலை மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள்: முதல்வர் ஆலோசனை விரைவில் அதிரடி அறிவிப்பு