தொடர்புடைய செய்திகள்
- 2 நாட்கள் டெல்லியில்!.. யாரையெல்லாம் சந்திக்கிறார் விஜய்?!... பரபர அப்டேட்...
- கொள்கை பேசி என்ன சாதித்தோம்? தவெக ஆதரவு வாட்ஸ்அப் மெசேஜை அம்பலப்படுத்திய காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி!
- தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் அவசர ஆலோசனை!
- பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..
- பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...
எல்லாமே தெரிஞ்சவங்க ஒன்னுமே பண்ணலையே.. புதுசா வந்தவங்க கவனமாக இருப்பாங்க.. விஜய் அரசு குறித்து சமுத்திரக்கனி!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்று அதிவேகமாக மக்கள் நலப்பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த புதிய நிர்வாகம் குறித்து பல்வேறு திரைத்துறையினரும், அரசியல் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, தற்போதைய விஜய் அரசு குறித்து கூறியுள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
விஜய் அவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்து பேசிய சமுத்திரக்கனி, "அவருக்கு என்ன தெரியும், அனுபவமே இல்லை என்று அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், இத்தனை காலம் எல்லாமே எங்களுக்கு தெரியும் என்று அனுபவத்தோடு ஆட்சி கட்டிலில் இருந்தவர்கள் இந்த மக்களுக்கு என்ன பண்ணீங்க? ஒண்ணுமே பண்ணலையே!" என்று கடந்த கால திராவிட ஆட்சிகளை தற்தொடர்புபடுத்தி நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அனுபவம் என்ற பெயரில் வெற்று பேச்சுகளை மட்டுமே நம்பியிருந்தவர்களுக்கு மத்தியில், மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு புதிய தலைமை நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எதுவுமே தெரியாதவர்கள் என்று விமர்சிக்கப்படுபவர்கள் தான், தங்களது அடிமட்ட பணிகளில் ரொம்பவே கவனமாக இருந்து மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்வார்கள். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என்று சமுத்திரக்கனி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Siva
