1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay going to delhi tomorrow

2 நாட்கள் டெல்லியில்!.. யாரையெல்லாம் சந்திக்கிறார் விஜய்?!... பரபர அப்டேட்...

vijay
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை டெல்லி செல்ல திட்டமிட்டிருக்கிறார். விஜய் முதல்வரான பின் முதல் முதலாக நாளை அவர் டெல்லி செல்கிறார். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

நாளை காலை 10 மணி அளவில் முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கு இரண்டு நாள் தங்கி பிரதமர் மோடி உள்ளிட்ட பலரையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். நாளை மாலை 4 மணிக்கு அவர் பிரதமர் மோடி சந்தித்து பேசவிருக்கிறார்.

அப்போது தமிழ்நாட்டின் நிதி நெருக்கடி மற்றும் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதிகள் பற்றியும் அவர் பிரதமர் மோடியிடம் விரிவாக எடுத்துரைத்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. மேலும் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
எல்லாமே தெரிஞ்சவங்க ஒன்னுமே பண்ணலையே.. புதுசா வந்தவங்க கவனமாக இருப்பாங்க.. விஜய் அரசு குறித்து சமுத்திரக்கனி!