1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. narendira modi talked to smith machchar

நாடே உங்கள் பக்கம்!.. விமானி ஸ்மித் மச்சாருடன் வீடியோ காலில் பேசிய மோடி!..

smnit machchar
174 பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் தற்போது துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார். விமானம் பயணிக்கும்போது துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்டு அவர் நிலை குலைந்தார். அதன்பின் பொதுமக்கள் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானி ஸ்மித் மச்சாரின் அறிவுரைப்படி விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்மித் மிச்சரை உண்மையான ஹீரோ என பல நாட்டு பிரதமர்களும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்மித் மச்சாரிடம் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்தார். அப்போது ‘நீங்கள் உண்மையான வீரன்.. உங்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.. முழு தேசத்தையும் நீங்கள் பெருமடைய செய்திருக்கிறீர்கள்.. இந்திய நாடே உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறது.. பாரதம் உங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கிறது.. உங்கள் நலனுக்காக நாடு முழுவதும் நேற்று பல கோயில்களிலும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன’ என்று பேசினார்..

அவரிடம் பேசிய ஸ்மித் மச்சார் ‘நீங்கள் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வழிகாட்டி.. என்னை நீங்கள் பாராட்டுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. கத்தியால் குத்தப்பட்டு கீழே விழுந்தவுடன் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் நினைத்தேன். 17 வருடங்களாக விமானியாக இருக்கிறேன்.  எழுந்து செயல்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குள்ளே நான் சொல்லிக் கொண்டேன். என்னை நானே உந்தி தள்லி காக்பிட் கதவை திறந்தேன்..

எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம் அனுமன் சாலிசாவை சொல்வேன். அன்றும் சொன்னேன். கடவுள்தான் என்னை காப்பாற்றினார். காத்விக் கதவை திறந்தவுடன் பயணிகள் உள்ளே வந்து என்னை காப்பாற்றினார்கள்.. உங்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை’ என்று அவர் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விலைவாசி ஏறிப்போச்சி!.. ரீல்ஸ் பாத்தா பசி போகுமா?!.. விஜய்க்கு ஸ்டாலின் கண்டனம்!...