6 மாசத்துல 12 வெளிநாடு டூர் போன பிரதமர் மோடி!.. 75 கோடி செலவு!.. மத்திய அரசு தகவல்!...
2014ம் வருடம் முதல் இந்தியாவில் நடந்த 3 பாராளுமன்ற தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. குஜராத்தில் மூன்று முறை முதலமைச்சராக வென்ற நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த மூன்று தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் நரேந்திர மோடியே பிரதமராக நீடித்து வருகிறார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார். 2026 ஆம் வருடம் மட்டும் பிரதமர் மோடி இதுவரை 12 வெளிநாட்டு பணங்களை மேற்கொண்டுள்ளார்.
அதற்கு மட்டும் அரசு சார்பில் ரூ.75 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக நார்வே பயணத்திற்கு 17.46 கோடியும், இஸ்ரேல் பயணத்திற்கு 11.92 கோடியும், சீஷெல்ஸ் பயணத்திற்கு ரூ.8.22 கோடியும் செலவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.