1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. narendira modi asking people not to buy gold

தங்கம் வாங்காதீங்க.. ஃபாரின் போகாதீங்க ப்ளீஸ்!.. பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை!...

modi
அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘அவசியம் இன்றி தங்கம் வாங்க வேண்டாம்.. இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.. உலக சவால்களுக்கு மத்தியிலும் இந்த பொருளாதார வளர்ச்சி நமக்கு கிடைத்திருக்கிறது..

இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்.. வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்த்து விடுங்கள்..

சுதேசி பொருட்களை பயன்படுத்துங்கள்.. 2020 கொரோனாக் காலம் முதல் இப்போது வரை ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை.. ஆனபோதும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.. எங்கு பார்த்தாலும் போர் பற்றிய செய்திகளாக இருக்கிறது.. உலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கிறது’ என அவர் அதில் பேசியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக்கில் 4 மாதங்களில் 17,854 கோடி வருமானம்!.. அம்மாடியோவ்!...