1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. More than 600 points up trend in sensex

600 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்: 55 ஆயிரத்தை தாண்டியதால் மகிழ்ச்சி!

sensex
கடந்த சில வாரங்களாக உக்ரைன் போர் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் சென்செக்ஸ் படு வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது சென்செக்ஸ் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது 
 
திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் இந்த வாரத்தில் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதிலிருந்தே சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது. சற்றுமு சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயர்ந்து 55 ஆயிரத்து 408 என்ற பொருளில் வர்த்தகமாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சென்செக்ஸ் 55 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நிப்டி 189 புள்ளிகள் உயர்ந்து 16529 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்கு சந்தை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாறுகிறது: ‘Bangla’ என மாறலாம் என தகவல்!