திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 20 ஜூலை 2022 (09:19 IST)

கிராமங்களை உருவாக்கும் சீனா – புகைப்படத்தால் அச்சம்!

டோக்லாம் பீட பூமியில் உள்ள சீன கிராமத்தின் புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.


டோக்லாம் பீட பூமிக்கு கிழக்கே பூட்டான் பக்கத்தில் சீன கிராமம் ஒன்று கட்டப்படுவதை குறிக்கும் புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளிவந்துள்ளன.  டோக்லாம் பகுதியில், பூடான் தனக்கு சொந்தமானது என்று கூறிய பகுதியில் சாலையை நீட்டிக்க சீனா முயற்சித்ததை அடுத்து அங்கு இந்திய மற்றும் சீன ராணுவங்கள் 73 நாள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனமான MAXAR சீன கிராமம் ஒன்று கட்டப்படுவதை குறிக்கும் புதிய செயற்கைக்கோள் படங்களை பகிர்ந்துள்ளது. அந்த கிராமத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டின் முன்புறத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறிப்பிடப்பட்டுள்ளது.

MAXAR இருந்து பெறப்பட்ட புதிய செயற்கைக்கோள் படங்கள், அமோ சூ நதி பள்ளத்தாக்கில் இரண்டாவது கிராமம் கிட்டத்தட்ட முழுமையடைந்துவிட்டதை குறிக்கிறது, அதே நேரத்தில் சீனா மூன்றாவது கிராமம் அல்லது குடியிருப்பை மேலும் தெற்கே நிர்மாணிப்பதை முடுக்கிவிட்டுள்ளது என்றும் தெரிகிறது. பூட்டானில் சீனாவின் விரிவான நில அபகரிப்பின் ஒரு பகுதியாக இது இருக்கும் என அஞ்சப்படுகிறது.