சென்னைக்கு வரும் கர்நாடக முதல்வர்!. விஜயுடன் சந்திப்பு நடக்குமா?..
தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தை அணுகியே தமிழகம் நீரை பெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுவதில்லை.
இதையடுத்து கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்து பேச தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திட்டமிட்டார். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் சந்திக்க வேண்டாம் என டி.கே.சிவக்குமார் கூறிவிட்டார். எனவே, விஜயின் பயணம் ரத்தானது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் கூறியபடி தமிழகத்திற்கு நீரை திறந்துவிட வேண்டும் என தீர்ப்பு சொன்னது.
இந்நிலையில்தான், வருகிற 20ம் தேதி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறும் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்னை வரவிருக்கிறார். எனவே, அப்போது தமிழக முதல்வர் விஜயை சந்தித்து அவர் காவிரி நீர் தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.