2029 தேர்தலில் மோடிக்கு சிம்மசொப்பனமாக இருக்க போவது ராகுல் காந்தி அல்ல, விஜய் தான்.. அரசியல் விமர்சகர்கள்...
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தேசிய அளவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை விட தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்தான் மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கப் போகிறார் என்ற கருத்து இந்திய அரசியல் அரங்கில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில் தொடங்கி இன்று தேசிய எல்லைகளை தாண்டி விஜயின் மக்கள் செல்வாக்கு மிக வேகமாக பரவி வருவதை கண்டு அரசியல் பார்வையாளர்களே வியந்துபோய் உள்ளனர். மாநிலத்தை கடந்து தேசிய அரசியலின் மையப்புள்ளியாக விஜய் மாறுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ள நிலையில், இது தில்லியில் உள்ள ஆளுங்கட்சியினரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.
இந்த அரசியல் மாற்றத்தின் முக்கிய மைல்கல்லாகத்தான் காங்கிரஸ் கட்சியின் தரவு மற்றும் பகுப்பாய்வுத் துறையின் தலைவரான பிரவின் சக்கரவர்த்தி தமிழக முதலமைச்சருடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தேசிய அளவில் அரசியல் வியூகங்களை வகுப்பதில் நிபுணரான பிரவின் சக்கரவர்த்தி போன்றவர்கள் விஜய்யுடன் கைகோர்ப்பது என்பது வெறும் மாநில அரசியலுக்கானது மட்டுமல்லாமல், எதிர்கால தேசிய அளவிலான கூட்டணிகள் மற்றும் தேர்தல் கணக்குகளுக்கான ஒரு பலமான முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
விஜயின் வளர்ச்சிப் பாதையையும் அவரது மக்கள் ஈர்ப்பையும் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தத் தேசியத் தலைவர்களும் முன்வருவது தமிழக அரசியலின் புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. மோடியும் அமித்ஷாவும் சற்றும் எதிர்பாராத அளவுக்கு வட இந்திய மாநிலங்களிலும் விஜய்க்கு ஆதரவான அலை உருவாகிக் கொண்டிருப்பதுடன், எதிர்கால அரசியலின் போக்கையே இது மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
