1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TVK Government's 100 Days Milestone Highlighted Through Full-Page Newspaper Ads Across India

விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தேசிய அளவில் நாளிதழ்களில் முழு பக்கம் விளம்பரம்.. என்னவோ திட்டம் இருக்கு.

தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று நூறு நாட்களை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, முன்னணி நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற முக்கிய தேசிய மற்றும் ஆங்கில நாளிதழ்களில் ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பதிப்புகளில் இந்த விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 100 நாட்களில் அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முதலீட்டு ஈர்ப்புகள் குறித்த தகவல்கள் இதில் விரிவாக இடம்பிடித்துள்ளன.
 
அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக முதலமைச்சர் விஜய்யின் இந்த நூறு நாள் சாதனை பயணம், அகில இந்திய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்துப் பிரபல நாளிதழ்களில் வெளியாகியுள்ள இந்த விளம்பரங்கள் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளன.
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சென்னைக்கு வரும் கர்நாடக முதல்வர்!. விஜயுடன் சந்திப்பு நடக்குமா?..