1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (10:41 IST)

இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Share
நேற்று மும்பை பங்குச் சந்தை ஒரே நாளில் நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தியதால் மீண்டும் தங்களது முதலீட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டனர் 
 
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது 
 
இன்று காலை 9 மணிக்கு தொடங்கியதிலிருந்தே சென்செக்ஸ் சிறிது அளவு உயர்ந்து உள்ளது என்பதும் சற்று முன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஐம்பத்தி ஐந்து புள்ளிகள் உயர்ந்து 54 ஆயிரத்து 575 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 16,300 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் முடிவின்போது சரிவில் சரிவில் முடியவும் வாய்ப்பு உள்ளது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்