1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Expand UPI Services Globally: PM Modi

விரைவில் இந்தியாவில் 6ஜி.. அமெரிக்காவுடன் இணைந்த இந்தியா...

பிரதமர் மோடி
அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு மேம்பாட்டு முன்னெடுப்பில் இந்தியா இணைந்ததாக அந்த நாட்டு வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது.
 
‘6ஜி தலைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான அழைப்பு’ என்ற முன்னெடுப்பை கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா தொடங்கியது. 2030-க்கு பின் 5ஜி வலையமைப்புக்கு பதிலாக 6ஜி வலையமைப்பை கொண்டு வரும் நாடுகளுக்கு உதவும் வகையிலான வியூகங்களை வகுக்கும் இந்த முன்னெடுப்பில் ஜப்பான், ஜொ்மனி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 
இதுகுறித்து அமெரிக்க வா்த்தக அமைச்சகம்  எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அடுத்த தலைமுறைக்கான 6ஜி வலையமைப்பை மேம்படுத்தும் முன்னெடுப்பில் அமெரிக்கா மற்றும் 24 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
 
முன்னதாக, அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி20 புத்தாக்க அமைச்சக ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் மற்றும் இந்திய வா்த்தக இணையமைச்சா் ஜிதின் பிரசாதா இதுதொடா்பாக ஆலோசனை மேற்கொண்டனா். அதன் தொடா்ச்சியாக இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
உலக அளவில் யுபிஐ பண பரிவர்த்தனை வசதி... பிரதமர் மோடி பேச்சு..