அதிகரிக்கும் அரிசி விலை!.. விரைவில் ஒரு கிலோ 100-ஐ எட்டும்!.. அதிர்ச்சியில் மக்கள்!..
தமிழகத்தில் கலந்த சில நாட்களாகவே அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற மக்கள் பயன்படுத்தும் அடிப்படை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ.300 முதல் 600 வரை அதிகரித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் சன்னக ரக அரிசியின் உற்பத்தி போதுமானதாக இல்லை என சொல்லப்படுகிறது.
எனவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துவிட்டது. இதனால் அரிசியின் விலை மேலும் உயரும் என்கிறார்கள்.
அனேகமாக தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கிலோ அரிசியின் விலை 100 ரூபாயக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக பீதியை கிளப்புகிறார்கள். 1400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீலக்ஸ் பொன்னி தற்போது ரூ.1800க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பொன்னி அரிசியின் விலை 1950ஆக உயர்ந்திருக்கிறது.
ரூ.1900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளை பொன்னியின் விலை இப்போது ரூ.2300-ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் இட்லி அரிசி 900-லிருந்து ரூ.300 உயர்ந்து ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி பல அரிசிகளின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.