1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Intelligence Report to CM Vijay Reveals Alleged Secret Plot by Thirumavalavan and Communists Against TVK Government

திருமாவும் விஜய் ஆட்சியில் நீடிப்பதை விரும்பவில்லையா? இடைத்தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?

thiruma vijay
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி அமைந்து இயங்கி வரும் நிலையில், தவெக ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக வெளியாகி உள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
குறிப்பாக, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தவெக ஆட்சியை விரும்பவில்லை என்றும், ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது போலக் காண்பித்துக்கொண்டே ஆட்சிக்கலைப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் திருமாவளவன், "சிறப்புச் சுருக்கத் திருத்தம்  மூலம்தான் தவெக வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டது" என்று பேசியதன் பின்னணியில் இந்த ரகசியத் திட்டம் இருப்பதாகக் தகவல்கள் கசிந்துள்ளன.
 
இந்த அதிர்ச்சி கரமான தகவல்களை உளவுத்துறை உடனடியாக முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது. உளவுத்துறை அறிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் விஜய், நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்து தனக்கு நெருக்கமான முக்கிய ஆலோசகர்கள் மற்றும் தவெக மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 
 
கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கவும், சாத்தியமான அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் தவெக தலைமை ஆயத்தமாகி வருகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரூ.20,000 கோடிக்கும் மேல் இழப்பு.. திமுக ஆட்சியின் அரசாணையை திரும்ப பெற்ற தவெக அரசு...