1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. central government collected eight thousand crore

மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கி கணக்குகளிலிருந்து 8 ஆயிரம் கோடி வசூல்.. பொதுமக்கள் அதிர்ச்சி...

money
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வங்கி கணக்குகள் இருக்கிறது.. அதேநேரம் எல்லோரும் வங்கி கணக்குகளில் பணத்தை வைத்திருப்பதில்லை.. பணக்காரர்கள் கோடி கணக்கில் வைத்திருப்பார்கள்.. லட்சாதிபதிஅக்ள் லட்சக்கணக்கில் வைத்திருப்பார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சில ஆயிரங்களில் இருப்பு வைத்திருப்பார்கள். பலரின் வங்கி கணக்குகளில் அதுவும் இருக்காது. ஏழைகள், முதியவர்கள் அவர்களுக்கு மாத மாதம் வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றிற்காக மட்டுமே வங்கி கணக்குகளை வைத்திருப்பார்கள்..

அதேநேரம் மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் நாம் பொதுமக்கள் கணக்கு துவங்கும் போது குறைந்தபட்ச இருப்பு தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என ஒரு விதி இருக்கிறது.. ஆனால் பொதுமக்கள் தங்களுக்குள்ல நிதி சுமை, பணப்பிரச்சினை காரணமாக அதை பின்பற்றுவதில்லை. அப்படி குறைந்தபட்ச இருப்பு தொகையை பொதுமக்கள் பின்பற்றாத போது அதற்கென்று ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து வசூலிக்கப்படுகிறது..

அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 11 பொதுத் துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாத கணக்குகளில் இருந்து அபராதமாக மொத்தம் 8902 கோடி வசூல் செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 2022-23 நிதி ஆண்டில் 2407 கோடியும், 2023-24 நிதியாண்டில் 2909 கோடியும், 2024-25 நிதியாண்டில் 2775 கோடியும் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
செல்போன் எண்ணை பிளாக் செய்த காதலன்.. வீடுதேடி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த காதலி..!