1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. congress mp christopher explain why vijay not met rahulgandhi

காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..

rahul vijay
தமிழக முதல்வர் விஜய் நேற்று அரசு முறை பயணமாக டெல்லி சென்றார். நேற்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது சில கோரிக்கைகள் கொண்ட ஃபைலை அவரிடம் விஜய் கொடுத்தார். அதன்பின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

அதன்பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விஜய் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. எனவே, முதல்வர் விஜய் தமிழகம் திரும்பினார். ராகுல்காந்தியை சந்திக்காமல் விஜய் சென்னை திரும்பியது விவாதங்களை கிளப்பியது.

இந்நிலையில், இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் ‘விஜயின் டெல்லி வருகை ஒரு முழு அரசு முறை பயணம் மட்டுமே. ஜூன் 11ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் டெல்லி வரும்போது சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை விஜய் சந்திப்பார் என நினைக்கிறேன்.

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பது ஒன்றும் கடினம் அல்ல. கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் நிகழ்கிறது. அதேபோல், ஜார்கண்ட் ஆர்.எஸ். எம்.பி விவகாரம் தொடர்பாக பேசுவதிலும் தலைவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். அடுத்தமுறை விஜய் டெல்லி வரும் போது கண்டிப்பாக அவரை ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நிச்சயம் சந்திப்பார்கள். இதை பெரிதுப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை’ என அவர் கூறினார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
இன்று ராஜினாமா செய்யும் சித்தராமையா!.. டி.கே.சிவக்குமார் முதல்வராவது எப்போது?..