1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay avoided to meet press in delhi

டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...

vijay modi
தமிழக முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோதே செய்தியாளர்களை சந்தித்தது இல்லை. சினிமாவில் வளரும் போது செய்தியாளர்களை சந்தித்தார். சில ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக மாறிய பின் செய்தியாளர்களை சந்திப்பதை அறவே தவித்து விட்டார். எந்த ஊடகத்திற்கும் அவர் பேட்டி கொடுப்பதில்லை.

அதேபோல அரசியலுக்கு வந்த பிறகும் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. ஒரு புதிய அரசியல் கட்சி துவங்கி செய்தியாளர்களை சந்திக்காத ஒரு அரசியல் தலைவராக விஜய் இருந்தார். இப்போது முதலமைச்சரான பின்னரும் விஜய் அப்படியேதான் இருக்கிறார். எங்கேனும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் தலை தெரிக்க ஓடிவிடுகிறார் விஜய்..

இதுவரை தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, முக ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி போன்ற யாரும் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றது இல்லை. ஆனால் விஜய் அதற்கு விதிவிலக்காக இருக்கிறார்.
நேற்று டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் அங்கு பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார்.

பொதுவாக எந்த மாநில முதலமைச்சர் டெல்லி சென்றாலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பது ஒரு மரபு. இதற்கு முன் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எல்லோருமே செய்தியாளர்களை சந்தித்தனர். ஏனெனில் தமிழக குரல் தேசிய ஊடகங்களில் வெளிவருவது முக்கியம். ஆனால் விஜய் அதை தவிர்த்துவிட்டார். இன்று காலை அவர் சென்னை திரும்பிவிட்டார்.

இதற்கு முன் டெல்லி சென்ற ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் மேற்குவங்க முதல்வரின் டெல்லி பேட்டிகள் தேசிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் விஜய் இதில் மிஸ்ஸிங்.
இதையடுத்து இப்படி ஒரு முதலமைமைச்சர் இருக்கலாமா? ஏன் இவ்வளவு மௌனமாக இருக்கிறார்?.. ஏன் அவர் செய்தியாளர்களை சந்திப்பதில்லை?.. அப்படி என்ன பயம்?.. எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை மட்டும்தான் விஜய் பேசுவாரா?’ என பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
அ.தி.மு.கவில் தொடர்வதா? வேண்டாமா? நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் சி.விஜயபாஸ்கர் இன்னொரு விக்கெட்டா?