தொடர்புடைய செய்திகள்
- திரிணமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொத்து கொத்தாக ஆதார் அட்டைகள்: தீவிர விசாரணை..!
- 1.69 கோடி சாதி சான்றிதழ்கள் போலியா? ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்த மேற்குவங்க முதல்வர்..!
- ஐபிஎல் 2026: குஜராத்தை துவம்சம் செய்த கொல்கத்தா; 29 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!
- ரிங்கு சிங்கின் அதிரடி: சூப்பர் ஓவர் டார்கெட் வெறும் 2 ரன்கள் தான்.. த்ரில்லரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
- ஸ்கேன் செய்யுங்கள்.. தேர்தல் நேரத்தில் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு?
கொல்கத்தாவில் முதல்முறையாக தொழுகைகள் இல்லாத சாலை: முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவால் மாற்றம்..!
கொல்கத்தாவின் ராஜா பஜார் பகுதியில், பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த சாலைகளில் தொழுகை நடத்தும் முறை, இந்த ஆண்டு முதல் முறையாக தவிர்க்கப்பட்டுள்ளது. முதல்வர் சுவேந்துவின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது.
சாலைகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதியின் முக்கிய சாலைகள் எவ்வித தடங்கலும் இன்றி போக்குவரத்திற்கு திறந்த நிலையில் இருந்தன. மத வழிபாடுகள் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்தைப் பாதிக்கக்கூடாது என்ற அரசின் தெளிவான கொள்கை முடிவுக்கு, இது ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
முந்தைய காலங்களில் சாலைகளில் தொழுகை நடத்தப்படுவதால், போக்குவரத்தில் பெரும் நெரிசல் ஏற்படுவதாகவும், அவசர கால ஊர்திகள் கூடச் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் பொதுமக்களிடையே புகார்கள் எழுந்தன.
இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் சுவேந்து பொது இடங்களில் போக்குவரத்து முடக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டதுடன், நகரத்தின் ஒழுங்குமுறை பேணப்பட்டுள்ளது.
Edited by Siva
