2 கோடி கொடுத்து கார் நம்பர் வாங்கிய தொழிலதிபர்!... இந்தியாவிலேயே அதிகம்!...
கார் வாங்குவது சிலருக்கு விருப்பமாக இருந்தாலும் அந்த காருக்கு அதிக விலை கொடுத்து விஐபி நம்பரை வாங்க பல தொழிலதிபர்கள் ஆசைப்படுவார்கள்.. அதை ஒரு பெருமையாகவும், கௌரவமாகவும் அவர்கள் கருதுவார்கள்.. அதுவும் தாங்கள் விரும்பிய நம்பர் வேண்டும் என்பதற்காக பல தொழிலதிபர்கள் பல லட்சங்களைக் கூட செலவு செய்கிறார்கள்..
கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹரியானாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது காருக்கு தனக்கு பிடித்த எண் வேண்டும் என்பதற்காக ஒரு கோடியே 17 லட்சம் செலவு செய்தார்.. இந்தியாவில் ஒருவர் கார் நம்பருக்கு அதிக செலவு செய்ததில் இதுதான் அதிகமாக இருந்தது.. தற்போது ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் இவரை ஓவர்டேக் செய்திருக்கிறார்..
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் கிரண் கோலிபாகுலா என்பவர் DDC 0001 என்ற இந்தியாவின் காஸ்ட்லி கார் நம்பர் பிளேட்டை 2 கோடியே 8 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார்..இதில் ஆச்சரியம் என்னவெனில் அவர் வாங்கிய காரின் விலையே 10 லட்சத்திற்கும் குறைவானதுதான்..