செல்போன் எண்ணை பிளாக் செய்த காதலன்.. வீடுதேடி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த காதலி..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலன் தனது செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் ஆத்திரமடைந்த காதலி அவரை நேரில் சென்று கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரை சேர்ந்த ரோஷினி (22) என்ற இளம்பெண்ணும், பிரசாத் (25) என்ற இளைஞரும் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி தீவிரமாக காதலித்து வந்தனர்.
சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரசாத் தனது செல்போன் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து ரோஷினியின் எண்ணை பிளாக் செய்துள்ளார். தன்னுடன் பேசுவதை தவிர்த்து, தன்னை முற்றிலுமாக புறக்கணித்த காதலனின் செயலால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ரோஷினி, கத்தியுடன் பிரசாத்தின் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாத்தின் மார்பில் பலமாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு ரோஷினியே நேரடியாக காவல் நிலையம் சென்று சரணடைந்தார். தற்போது போலீசார் அவரை கைது செய்து, கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதள புறக்கணிப்பு ஒரு கொடூர கொலையில் முடிந்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva