வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (15:29 IST)

பாம்புக்கடியால் மரணம்...! ஆற்றில் வீசப்பட்ட உடல்:15 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த அதிசயம்..!

snake
பாம்பு கடித்தால் உயிரிழந்த சிறுவனின் உடலை ஆற்றில்வீசிய நிலையில் 15 ஆண்டுகள் கழித்து அந்த சிறுவன் வாலிபனாக உயிருடன் திரும்பி வந்தது வெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆங்கேஷ் யாதவ் என்பவர் 10 வயதாக இருக்கும்போது பாம்பு கடித்தது. இதனை அடுத்து நுரை தள்ளி சிறுவன் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து ஆங்கேஷ் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக குடும்ப உறுப்பினர்கள் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற நிலையில் அந்த சிறுவனின் உடல் மோசமடைந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.  இதனை அடுத்து அந்த ஊரின் வழக்கப்படி சிறுவனின் உடலை வாழைத்தண்டில் வைத்து சரயு ஆற்றில் விட்டனர். இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த சிறுவன் வாலிபர் ஆகி அதே ஊருக்கு திரும்பி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆற்றில் மிதந்து கொண்டிருந்தபோது தனக்கு நினைவு திரும்பியதாகவும் அப்போது அங்கிருந்து லாரி டிரைவர் வருவார் தன்னை எடுத்து வளர்த்ததாகவும் இத்தனை ஆண்டுகள் கழித்து தன்னுடைய ஊரை ஞாபகம் வைத்து திருப்பி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
 
15 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட ஒருவர் தற்போது உயிருடன் திரும்பி வந்தது. அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran