1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 26 ஜனவரி 2023 (15:26 IST)

பாம்பை கொஞ்சியபடி செல்பி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

snake
பாம்பாட்டி இடமிருந்து பாம்பை பிடிங்கி பாம்பை கொஞ்சியபடி செல்பி எடுத்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே செல்பி மோகம் காரணமாக பல இளைஞர்கள் உயிரிழந்து வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
அந்த வகையில் ஆந்திராவில் உள்ள மணிகண்டா என்ற இளைஞர் பாம்ப்பாட்டியிடம் இருந்து வலுக்கட்டாயமாக பாம்பை வாங்கி அதனை கழுத்தில் சுற்றிக்கொண்டு செல்பி எடுத்தார். 
 
அப்போது திடீரென பாம்பு கொத்தியதால் அவர் மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva