வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (06:17 IST)

தாயை இழந்து தவிக்கும் அண்ணனுக்கு ஆறுதல் - முக ஸ்டாலின்!

ஓ. பன்னீர் செலவதின் தயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
 
தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்றிரவு காலமானார்.  96 வயதாகும் பழனியம்மாள்  வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
 
சிகிச்சை பலனளிக்காததால் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் பழனியம்மாளின் உயிர் பிரிந்தது. செய்தியறிந்து சென்னையில் இருந்து தேனி வந்தார் ஓ. பி. எஸ். 
 
இந்நிலையில்  ஓ. பி. எஸ் தயார் பழனியம்மாள் மறைவுக்கு முஹல் முக ஸ்டாலின்,  "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம்  அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.
ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என ட்வீட் செய்துள்ளார்.