வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (11:05 IST)

மன தைரியத்துடன் இருங்கள்.. ஓபிஎஸ்-க்கு சசிகலா ஆறுதல்..!

OPS Sasikala
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் மறைவை அடுத்து அவருக்கு சசிகலா ஆறுதல் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஆகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர் ஓ பன்னீர்செல்வம் என்பதும் இவர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே. அதிமுகவில் ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி என இரு அணிகள் இருந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக அதிமுக முழுமையாக ஈபிஎஸ் வசம் சென்றது என்பதும் இதனால் ஓபிஎஸ் கடும் சிக்கலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்ட ஓபிஎஸ் பாஜகவில் இணைவாரா அல்லது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்று தொண்டர்கள் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவரது தாயார் என்று காலமானார். இதனை அடுத்து ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
அவர் தனது இரங்கல் செய்திகள் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அன்பு சகோதரர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் ஏக்கர் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமற்றேன். 
 
இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும் இந்த இழப்பை தாங்கி கொள்ளும் சக்தியையும் தரவேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran