திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (15:35 IST)

மீண்டும் உயரும் அதானி குழும பங்குகள்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

adani
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் என்ற நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் படு வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது மீண்டும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஏறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பு அதானி குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி என்டர்பிரைசஸ் 3000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனையானது. ஆனால் சமீபத்தில் அந்த பங்குகள் 1017 ரூபாய் என்று விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை இந்த பங்கின் விலை 1,118 என்று உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவின்படி அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 1372 ரூபாய் அதிகரித்துள்ளது. இது நேற்றைய விலையை விட 15 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதானி என்டர்பிரைசஸ் மட்டுமின்றி அதானி குழும நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகள் இன்று ஏற்றம் கொண்டு வருகின்றன.
 
இருப்பினும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முந்தைய விலை எப்போது வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran