திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:12 IST)

விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொன்ன ரசிகர்… அதுக்கு அவரின் ரியாக்‌ஷன்!

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனோ, இல்லை லைகா நிறுவனமோ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகனின் அம்மா அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக இருக்கும் காட்சியைப் பகிர்ந்து, அதில் விக்னேஷ் சிவனை டேக் செய்து “இது உங்களுக்குதான் விக்னேஷ் சிவன்” எனக் கூறியிருந்தார். ரசிகரின் இந்த ட்வீட்டை விக்னேஷ் சிவன் லைக் செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.