Sardar 2 Movie Review: சர்தார் 2 ட்விட்டர் விமர்சனம்
கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார். ஸ்பை த்ரில்லர் படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் வெற்றியை அடுத்து சர்தார் 2 இன்று திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தில் ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் என மூன்று ஹீரோயின்ஸ் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகம் போலவெ இப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காணலாம்.
கிரிஸ்டோபர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கார்த்தி தனது இரட்டை வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். ஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் பலவீனமாக உள்ளது. பின்னணி இசை மற்றும் சிஜிஐ (CGI) மோசம். சுவாரஸ்யமான திருப்பங்கள் இல்லை, நீளமான மற்றும் அர்த்தமற்ற சண்டைக்காட்சிகள். மொத்தத்தில் ஏமாற்றம் என்று பதிவிட்டுள்ளார்.
காவ்யா அவாஸ்தி என்பவர் நல்ல கதைக்களம், ஆனால் சொல்லப்பட்ட விதம் படுசுமார். ஆரம்பம் சுவாரஸ்யமாக இருந்தாலும், குழந்தைத்தனமான எழுத்தும் நீளமான ரன் நேரமும் படத்தை போரடிக்க வைக்கிறது. இசை மோசம். சண்டைக்காட்சிகளும் தயாரிப்பு தரம் மட்டுமே கொஞ்சம் தேறுகிறது. நல்ல படமாக வந்திருக்க வேண்டிய வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது; மொத்தத்தில் ஏமாற்றமே என்று பதிவிட்டுள்ளார்.

