1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. Vishwanath and Sons Review

Vishwanath and Sons Review: எப்படி இருக்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்
கருப்பு மிகப்பெரிய வெற்றிக்கு  பின் சூர்யா நடிப்பில் இன்று வெளியாகும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சித்தரா எண்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளன்ர். வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே வினியோகஸ்தர்கள் தரப்ப்பில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே வந்தன. விஜய் அரசியலுக்கு சென்ற நிலையில் அடுத்து யார் அவரது இடத்தை நிரப்புவார்கள் என பலரும் நினைக்க தி ஒன் என்ற டைட்டிலுடன் இப்படம் வெளியாக்கியுள்ளது.
 
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு  மத்தியில் இன்று விஸ்வநாத் அண்ட் சன்ஸ்  வெளியாகிறது. வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் இன்று அதிகாலையிலேயே படம் வெளியானது. படம் குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.



















கிறிஸ்டோபர் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், முதல் பாதி சூப்பர் என பதிவிட்டுள்ளார். கிரிஞ்சாகவும் மிகவும் ஸ்லோவான திரைக்கதையுடன்  படம் ஆரம்பித்தாலும் அதன் பிறகு படம் பிக்கப் ஆகி இடைவேளை வரை ரொம்பவே சிறப்பாக சென்றது என பதிவிட்டுள்ளார். அழகான சூர்யா - மமிதா - ராதிகா காம்போ செம காமெடியாக உள்ளது. ஹாஸ்பிடல் சீக்வென்ஸ், ட்ரிப் காமெடி, ஹோட்டல் ஃபைட் தான் முதல் பாதியில் செம ஹைலைட் என்றும் இதே போல 2வது பாதியும் இருந்தால் படம் பிளாக்பஸ்டர் தான் என கூறியுள்ளார்.
 
பிரபல டோலிவுட் விமர்சகர் வெங்கி விஸ்வநாத் இப்படம் குறித்து தனது விமர்சனத்தை என்ஸ் பக்கத்தில் ப்பகிர்ந்துள்ளார். அதில்  அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் முதல் பாதி சூப்பராகவே இருந்தது என்றும் ஆனால் 2வது பாதி ரொம்பவே வீக் என தனது விமர்சனத்தை தடாலடியாக கொடுத்துள்ளார். மிகவும் ஃபிரெஷ்ஷான காட்சிகளுடன் முதல் பாதி ரசிக்க வைக்கிறது.  வெங்கி அட்லூரியின் வசனங்கள் சிறப்பாக உள்ளது. 2வது பாதியில்  திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.











































சரத் சந்திரா என்பவர் இப்படம் தனுஷின் திருச்சிற்றம்பலம் போல ஃபீல்குட் படமாக அமைந்துள்ளது. நிச்சயம சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் ரெடி என்று பதிவிட்டுள்ளார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
குழந்தை விசயத்தில் விருப்பம் இல்லை .. துஷ்ரா விஜயன் ஓபன் டாக்!